இன்னும் என்ன தயக்கம்
தமிழன் கருப்பானவன்
தமிழச்சி கருப்பானவள்
உதாரணம்
நீயும்..நானும்
இன்னும்
என்ன தயக்கம்...
ஏன்...?
உன் துணையை
வெண் நிறத்தில் தேடுகிறாய்....
"வெள்ளை -அழகல்ல
நிறம்". என்று
எங்கோ
படித்தது ஞாபகம்
வருகிறது....
உண்மைதான்...
வடநாட்டு
பிச்சைக்காரி
கூட
வெள்ளை நிறம்தான் ....
உன்
வருங்கால துணை
அதிகம்
ஆங்கிலத்தில்
பேசவேண்டும்
என்று
ஆர்ப்பரிக்கிறாய்...
தெரியாதோ உனக்கு
"ஆங்கிலம் அறிவல்ல
ஒரு மொழி" என்று....
இன்னும்
என்ன தயக்கம்..
தயங்காமல் சொல்
நீதான்
என் வாழ்கை
துணைவி என்று.....

