அடியே வீட்டுக்காரி

அடியே வீட்டுக்காரி....

என்னை முயற்சிக்க விடாமல்
ஒவ்வொரு முறையும்
குறைந்தபட்சம் ஒரு தோசையை
பிய்த்துத்தான் தருகிறாய்

எழுதி கொடுத்த பொருளில்
சிலவை இரண்டாகிப் வீடு வர
லிஸ்டைக் காட்டி உச்சு கொட்டுகிறாய்

சில நாட்களுக்கு இடையை
நாட்களை மடக்கி வைத்து விட்டு
அத்தனை முறையும் புதிதாக டைரி
எழுத தொடங்குகிறாய்

என் லீவிஸ் டெனிம் லீ
ரக ஜீன்ஸ்களை
உன் தேர்ந்தெடுத்தலுக்கு பின்
வீடு கொண்டு சேர்க்க
போதும் போதும் என்றாக்குகிறாய்

ரோஜாக்களை பறிக்கும் போது
தலை திருப்பிக் கொள்கிறாய்
குழம்புக்கு உப்பினை எனை
பார்க்கச் சொல்கிறாய்

வேண்டாமென்று சொல்லியும் ஒரு
டைல்ஸை விட்டு வெளியேறாமல்
ஐந்து புள்ளி ஐந்து வரிசை மிகாமல்
கோலம் எனும் அதை போட்டே தீர்கிறாய்

இதற்கு மேலும் பொறுத்து கொள்ள
முடியாத நான்
சிரித்து விடுகிறேன்
உன் திருவாய் மலர்ந்து
"ஆண்கள் தின வாழ்த்துக்களை"
சொல்லி முடிக்கையில்.........

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (20-Nov-15, 4:37 pm)
பார்வை : 67

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே