வேதனையான சோதனை - சிஎம் ஜேசு
ஒரு நாள் நான்,தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் இசை வகுப்பை முடித்துக் கொண்டு
என்னுடைய கைப்பேசியை சரி செய்வதற்காக ,தாம்பரம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்த ஒரு
செல்போன் கடைக்கு சென்றேன் . அவ்வேலையை முடித்துக் கொண்டு வேளச்சேரிக்கு வருவதற்காக தாம்பரம்
நேஷனல் திரையரங்கம் சாலை வழியே தாம்பரம் முதன்மைச் சாலைக்கு திரும்பினேன் .
உடனே அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் மனிதர் ,என்னை தன் கரத்தில் பிடித்திருந்த கம்பினைக் காட்டி நிறுத்தினார் .அப்போது மணி இரவு 9 இருக்கும் நானும் வண்டியினை
சாலை ஓரமாக நிறுத்தி விட்டு ,சொல்லுங்க சார் என்றேன் .
போலீஸ் : எங்கே போயிட்டு வரீங்க என்றார்
நான் : இங்கு தான் சார் செல்போன் கடைக்கு போயிட்டு வரேன் என்று சொன்னேன்
போலீஸ் : உங்க வீடு எங்கிருக்கு என்று கேட்டார்
நான் : வேளச்சேரி என்று சொன்னேன்
போலீஸ் ; வேளச்சேரியில் செல்போன் கடை இருக்கும் போது ஏன் இங்கு வந்து இருக்கீங்க என்றார்
நான் : நான் என்ன சொல்வதென்று அறியாது திகைத்துப் போனேன் ஏன் இப்படிக் கேட்க்கிறார் என்று
மனதுக்குள் நினைத்துக் கொண்டு சார் நான் இசையாசிரியர் இங்கே வகுப்பு எடுப்பதற்காக
வந்தேன் என்று நிதானமாக சொன்னேன் .
போலீஸ் ; சரி சரி போங்க என்று சொன்னார்
நான் ; நான் உடனே அங்கிருந்து கிளம்பினேன். வரும் வழியெங்கும் மனத்தால் குழம்பினேன் .
வேதனை என்னை துளைத்தது .அவர் என்னை நிறுத்திய விதமும் , கேட்ட கேள்வியும் பெரிதும் பாதித்தது
அரசு வேலையில் இருக்கும் அதிகாரமும் ,அதட்டினால் அடங்கி முடங்கிப் போய்விடும் என்னையும் எண்ணி
எண்ணி உள்ளம் வதைந்த நிகழ்வை உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன் .
சட்டங்கள் மரியாதைக்கு உரியது அதை செயல் படுத்தும் விதம் கேள்விக்குறியாகிறது ?
இது என் வாழ்வில் வேதனையான சோதனை .