மழை போல ~ ஆதர்ஷ்ஜி
மழை போல...
~ ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»»
படபடவென
இமைப்பதற்குள்
பொழிந்து தள்ளிவிடுகிறது வானம்....
எழுதத்தான்
முடிவதில்லை,
அத்தனை இயல்பாய்,
அழகாய்
விரைவாய்...
வருவதில்லை
மழைக் கவிதைகள்...
எத்தனை முறை முயன்றாலும்...
கவிதை எழுத முயன்று
கிழித்த
காகிதங்கள்
கப்பலாகின
மகன் கையில்.....
கவிதையாய் நகர்கின்றன கப்பல்கள் மழை நீரில்....
கவிதை தாங்கிச்
செல்லாவிட்டாலும்..
முயன்று கொண்டே இருக்கிறேன்
இன்னும்...
~ஆதர்ஷ்ஜி
.~~~~~~~~~~~~~~~

