வெகுளித்தனம் கவிதை

வெகுளித்தனம்…!!
*
புத்திசாலியை, பைத்தியக்காரனைப்
புரிந்துக் கொள்ளலாம்.
புரிந்துக் கொள்ள முடியாமல் போகலாம்
புதிராகவே எப்பொழுதும்
புரிந்துக் கொள்வதற்கும்
புரியாமல் போவதற்கும்
புரிய வைப்பதற்கும்
சிரமமாக இருப்பவனே
இரண்டாங் கெட்டான்.
எப்படியோ?
சமாளிப்பான் அறி்வாளி
சங்கடப்படுவான் வெகுளி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (24-Nov-15, 10:01 am)
பார்வை : 221

மேலே