ஆனந்தத் தரிசனமே

பரமனவன் சிரசினிலே பாதிமதி நதிசூடி
அரவமணி கழுத்தினனாய் அம்பிகையை இடங்கொண்டு
சுடரனைய மேனிதனில் சுட்டவெண் ணீறுபூசி
அடலருணைக் கோபுரத்தே ஆனந்தத் தரிசனமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Nov-15, 4:40 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 75

மேலே