விழுதுகளும, வேர்களும்

ஊருக்கு போன பின்னர் பாட்டியினை அழைத்து வந்தார் தந்தை. எப்போதும் பாட்டி என்றால் குழந்தைகளுக்கு சந்தோஷம் அது போல தான் எனக்கும். நான், எனது தங்கை மற்றும் என் வீட்டிலுள்ள சுட்டிகள் அனைத்தும் அவரை சுற்றி உட்கார்ந்து கதை சொல்ல சொன்னோம். பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊரில் பாட்டி,தாத்தாவாம். அவர்களுக்கு மூன்று குழந்தைகளாம். மூன்று பேரையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்களாம். படித்தபின்னர், வேலை வாங்கி திருமணம் செய்து வைத்தார்களாம். காலம் மாற, பாட்டியையும், தாத்தாவையும் விட்டு அவர்களது பிள்ளைகள் சென்று விட்டார்களாம். எவ்வளவோ கேட்டும் அவர்களை அழைக்காமல், மாதம் பணம் மட்டும் அனுப்பி வைப்பார்களாம். எப்போதாவது ஊருக்கு வந்தால் மட்டும் அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்வார்களாம். பின்னர் அனுப்பி விடுவார்களாம்.
அதனை கேட்ட நான் கேட்டேன், என்னபாட்டி நீ. அந்த பாட்டியும், தாத்தாவும் எங்கே அனுப்பி வைப்பார்கள்.
அதற்கு பாட்டி சொன்னார். முதியோர் இல்லம்.
நாள் சொன்னேன். அப்படி என்றால் நீயும், தாத்தாவும் அங்கே தான் உள்ளீர்களா. அப்படி என்றால் ஒரு இடம் பிடித்து வையுங்கள் என் அப்பாவையும், அம்மாவையும் நானும் உங்களை போல அனுப்பி வைக்கிறேன்.

எழுதியவர் : கேஆர்கே (26-Nov-15, 5:50 pm)
சேர்த்தது : kanagavelu010369
பார்வை : 157

மேலே