மரியாதை ராமன் கதை

ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார், அவர் ஒரு கன்று குட்டியை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார்,

திடீரென வியாபாரி வெளியூர்க்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்,

கன்று குட்டியை தன்னுடன் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது வியாபாரிக்கு,

அதனால் கன்று குட்டியை தன் பக்கத்து வீட்டு காரரிடம் கொடுத்துவிட்டு விட்டு, நான் விரைவாக வந்து விடுவேன், நான் எனது கன்று குட்டியை எப்படி விட்டு செல்கிறேனோ நான் கேட்கும் போது அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும், எவ்வித மாற்றமும் சேதமுமின்றி என்று கூறி,கன்றை பக்கத்து வீட்டு காரரிடம் விட்டு சென்றார்,

நாட்கள் பல கழிந்தது, மாதங்கள் பல கழிந்தது, வருடங்கள் பல கழிந்தது

. கன்று வளர்ந்து பசுவானது பால் கொடுக்க ஆரம்பித்தது, பக்கத்து வீட்டு காரரும் தினந்தோறும் பசுவிடம் பால் கறந்து விற்று வந்தார் சிறிது காலம் கழித்து பசு கன்று ஒன்றை ஈன்றது,

திடீரென வியாபாரி பக்கத்து வீட்டு காரரிடம் வந்து தனது கன்று வளர்ந்து பசுவாகியிருக்கும் எனது பசுவை தருமாறு கேட்டார்,

அதற்கு பக்கத்து வீட்டு காரர் மறுப்பு சொல்லவே இருவருக்கும் வாக்குவாதம் முட்டியது

மரியாதை ராமனை பற்றி கேள்விபட்டு இருவரும் அவரிடம் சென்று முறையிடுவோம் என்று முடிவு செய்து மரியாதை ராமனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டனர்

மரியாதை ராமன் இருவரையும் விசாரித்தார் வியாபாரியோ இது என்னுடைய பசு நான் தான் சிறிது காலத்திற்கு முன்பு இது கன்றாக இருந்த போது இவரிடம் ஒப்படைத்து விட்டு நான் கேட்கும் போது அப்படியே கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றேன் என்றார்,

பக்கத்து வீட்டு காரரோ இவர் பல காலத்திற்கு முன்பே என்னிடத்தில் கன்றை விட்டு சென்றார், இப்பொழுது வரை நான் தான் எனது கை செலவில் இதற்கு தீவனம் வாங்கி போட்டு வருகிறேன், அதனால் இந்த பசு எனக்கே சொந்தம் என்றார், மரியாதை ராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார், பிறகு பசுவையும் அது ஈன்ற கன்றையும் நாளை கொண்டு வருமாறு கூறி தீர்ப்பை நாளை கூறுகிறேன் என்றார்

இரவு கழிந்தது, சூரியன் உதித்தது, ஊர் மக்களும் தீர்ப்பை கேட்க அவையில் கூடினர்,

பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம் என்றார் மரியாதை ராமன், அதற்கு வியாபாரியோ இது எப்படி நியாயம் என்று உரத்த குரலில் கேட்டார், அதற்கு மரியாதை ராமன் நீங்கள் தானே பக்கத்து வீட்டு காரரிடம் நான் எப்படி என் கன்றை விட்டு செல்கிறேனோ, நான் திருப்பி கேட்கும் போது எவ்வித பாதிப்பும், மாற்றமுமின்றி அப்படியே கொடுக்க வேண்டும் என்றீரே, அந்த பசுவின் கன்று நீங்கள் எப்படி விட்டு சென்றீரோ அப்படியே தானே உள்ளது என்றார்

மரியாதையும் ராமன் பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம், அது ஈன்ற கன்று வியாபாரிக்கு சொந்தம், மேலும் கன்று வளரும் வரை பசுவையும் கன்றையும் பிரிக்க வேண்டாம் என்று கூறி தீர்ப்பை முடித்து வைத்தார்,

எழுதியவர் : விக்னேஷ் (26-Nov-15, 10:53 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 813

மேலே