shwarachiyankal

புதிதாக பாடும்
பாடகரை போல்
பெரும் சத்தத்தோடு
மேடு பள்ளங்களில்
நொண்டி விளையாடும்
சிறுமியாய்
ஊர்ந்து சென்றது
அந்த ஊர்தி

சன்னல் அருகே
சில்வண்டு சிறார்கள் பேச்சு
கதை கதையாய் ஆயிரமாய்

தங்க குடம் எடுத்து
வெள்ளி விளக்கு வச்சி
வங்களா அண்டா நிறைய
தேகிட்டாத மாம்பழம் அடுக்கி
பொன் முக்காலி போட்டு
வண்டு கால் படாத
பூ தொடுத்து மாலை கட்டி
ஊரே வியக்க சிறப்பாக
செய்து புட்டோம்ல
தாய்மாமா சீர

எவளின் நாத்தனாரோ
தற்பெருமை பிடிக்கதவள் போல்
அளவாக பேசி வந்தாள்.

சீறும் பாம்பாய்
பயணீகள் அனைவரையும்
டிக்கட் டிக்கட் என
துரத்தி வந்தார்
புதிதாக வேளைக்கு வந்திருத்த
நடத்துனர்

யார் வந்தாள் என்ன?
போனால் என்ன?
தங்களுக்காகவே
புது உலகத்தை
செதுக்கி கொண்டிருதார்கள்
புது மன ஜோடி

அது இப்படி
இது இப்படி எங்கேயோ
படித்து பார்த்தது
ஒன்று விடாமல்
சொல்லிகொண்டே ,
பார்வை அம்பை
ஒருத்தியிடம் செலுத்தும்
கல்லூரி காளை.

யாரும் அறியாமல்
அவன் குரல் கேட்டு
சிரிக்கும் இளம்குமரி.

என்ன நடந்தாலும்
கவலையின்றி தூங்கும்
சுகவாசிகள்

தின்பண்டகளை பங்கு போட்டு
சாப்பிடும் அக்கா தம்பி .

இருக்கை இருந்தாலும்
தொங்கி கொண்டேவரும்
இளவட்டங்கள்

ஒலிபெருக்கி தரும்
பாடல்வரிகளை
லயித்து திரும்ப பாடும்
சிவப்பு ரோஜாக்கள்

அழாத செல்லம்
இப்ப இறங்கிருவோம்.
பாரு கார் பாரு.
எப்படியும் தென்படும்
கைக்குழந்தை - அம்மா

எனது நிறுத்தம்
வந்து விடவே இறங்கிய நான்
இன்னும் பல
சுவாரசியங்கள்
சுமந்து செல்லும்
ஊர்தியை கண் மறையும்
தூரம் வரை
பார்த்து கொண்டே இருந்தேன்

இதோ
அடுத்து அடுத்து
சுவாரசியங்கள்
தொடர்கிறது.

எழுதியவர் : ரதி rathi (27-Nov-15, 1:31 pm)
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே