எனக்குள் நான்
எனக்குள் நான் மிகவும் நல்லவன்
என்றவரி படித்ததும் உன்முகம் சிரிக்கும்
பைத்தியம் இவனென உலகம்கூட நினைக்கும்
என்னைப்போல் நீயென்றால் இந்நிலைதான் உனக்கும்
உண்மைக்கும் நன்மைக்கும் இடமில்லா உலகில்
நம்மைபோல் பலரில்லை பலரைப்போலே நாமென்று
தன்னிலையின் தடம்மாறி வாழ்பவனாய் நாளும்
என்னைப் பார்த்து சிரிக்கின்றேன் எனக்குள்நானும்
$ மூர்த்தி