வெற்றி ஏணி
பொறுமை கொள் மனமே
இன்னும் இன்னும் பலம் பெறு.
சோதனைகளை வரவேற்று
ஒரு சேர கோர்த்து
சாதனைகளாய் மாற்று
இப்போது வேண்டுமானால்
சுற்றம் உன்னை
கேளிக்கை பொருளாய்
நினைக்கலாம்.
வீண் கவலைகளை
வீதியோடு விட்டு விடு
மற்றவர்களின்
கேலி கூத்து
வார்த்தைகளை
இதயத்தில் தேக்காதே.
எத்தனை எதிரிகள்
எத்தனை வஞ்சகர்கள்
வாய் விட்டு சிரி
உன்னை
வெற்றி ஏணியில்
ஏற்றி விடுவதில்
அவர்கள் பங்கும்
உண்டென்பதை
மறந்துவிட்ட
"நாகரிக கோமாளிகள்"
இவர்கள்
வருந்தாதே
தளராதே
உன் அருமை
உலகிற்கு தெரியும் நாள்
வெகு தொலைவில்
இல்லை
மிக அருகில்