இனிய நினைவுகள்
என்றுமே இளமையானது
என்றுமே இனிமையானது
என்றுமே அருகில் உள்ளது
என்றுமே நம்மை எச்சரிப்பது
என்றுமே நம்மை உற்சாகப்படுத்துவது
நம்முள் உறைந்து போன -நம்
" நினைவுகளே "
நம் இதயத்தின் கண்ணாடியாக
நம் தவறுகளைத் திருத்தும் ஆசானாக
நம்மைத் தேற்றும் அன்னையாக
நம்மை அறிவுறுத்தும் தந்தையாக
நம்மை சீர்படுத்தும் சீர்திருத்தவாதியாக
இருப்பது நம் நினைவுகளே !!!