திருமண மேடையில்

மா இலைத் தோரணங்கள்
மாமன் முறைக்கு அலங்கரித்து
வாழை மரம் எல்லாம் வாசலிலே வரவேற்க
மஞ்சளிலே குளித்தெழுந்த கயிறோ
மங்கலமாய் காத்திருக்க
பல நிற மலரெல்லாம்
தோரணமாய் தொங்கவிட-மனமேடையோ
மணம் வீசிக் காத்திருந்ததடி
மங்கை அவள் தலை நிமிராது
தோழியர்கள் கூட்டி வர
மான்குட்டி போன்ற அவள்
துள்ளாது மெல்ல நடையிட்டு பக்கம் வர
ஒருநாளும் நான் அணியாத பட்டுத்துணி
உடுத்தி காத்திருந்த காலம் அது
அக்கினித் தேவனை மந்திரம் ஏற்றி
வரவேற்த்து மங்கள மரகுச்சி எல்லாம்
ஒரு சேர ஒளி கூட்டியதடி
வென்முகிலோ என் கண்ணை மறைக்க
என்னவள் நடந்து வந்த தருணம் அது
வெட்கம் ஒன்று புதிதாக
அப்போது எனை பற்றிக்கொள்ள
நீ என் பக்கம் வந்ததும் உல்லூரும்
உயிர் கூட சிலிர்த்ததடி
வான் பிளக்கும் மங்கள வாத்தியங்கள்
எட்டுத்திசை எங்கும் ஒலித்தபடி
நம் உறவுகளை வரவேற்க
வந்தவர்கள் எல்லோரும் ஊர் கதை குறைத்து
நம் இருவரையும் பார்த்தபடி அமர்ந்தார்கள்
எப்போது நாம் இணையும் காலம் வரும் என
காத்திருந்த காலம் பல உண்டு
இப்போதோ சில நொடி கூட
காத்திருக்காது மனம் ஆர்பரித்ததடி
எப்போது சொல்வார்கள் கெட்டி
மேள சத்தத்தை கூட்டிட
அப்போது வரை இதயமும்
மேள சந்தத்துக்கு இணையாக
ஒழித்துக் கொண்டு இருந்ததடி
நம் காத்திருந்த தருணம் தான் வந்ததடி
அப்போது இருவரும் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க
கை வந்த மாங்கல்யம்
கை நடுங்க உன் கழுத்துக்கு வர
கை பிடி பிள்ளையார்,
அக்கினித் தேவன்,
உற்ற உறவுகள்,
ஊர் பெரியோர்கள் சாட்சியாக,
உன் கழுத்தில் நான் சேர்த்திட
மேள தாளம் எல்லாம் ஓங்கி ஒழிக்க
மஞ்சள் பூசிய அரிசி எல்லாம்
நம் மீது பூப் போல் வந்து விழுந்ததடி
அப்போது நிறை பெற்றது நம் கல்யாணம்

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (29-Nov-15, 11:23 pm)
Tanglish : thirumana medai
பார்வை : 1242

மேலே