மணவாளன் நீ என
மணவாளன் நீ என,
மங்கை இவள் வாய் மலர
வந்தது என்னவோ சோகமே..!!
உனக்கும் என்னை பிடித்திருக்க,
எனக்கும் உன்னை பிடித்திருக்க
படைத்தவன் செய்த பிழை,
பெண் இவள் விழி எங்கும் மழை.. !!
தோழி என்று நடித்திருப்பின்,
தோழமை கொஞ்சம் மிஞ்சியிருக்கும் .. !!
வேலிக்குள்ளே நின்றிந்தால்,
வேதனையாவது அருந்திருக்கும்.. !!
விதி செய்த சதி என்று, நீ கொஞ்சம் விலகி இருக்க.
செய்வதொன்றும் அறியாமல், பேதை இவள் கலங்கி நிற்க.. !!
நீ என்னை கடந்து செல்லும்,
கணங்கள் யாவும்.. !
என் முன்னே, எந்தன் பிணங்கள்.. !!
-சோகமும் சுகம் ஆகும்..