ஒருமை

என்னுள்
எழுந்து
எப்போதும் நிறைந்து
அடிக்கடி தகராறு ஏற்பட்டு
வந்தது.
ஒருமை - தனிமை
ஒருமை - இது
அனுபவத்தின் சிகரம்
ஒரு வெளிச்சம்
எரியும் சுடர்
தனிமை - இது
அகன்ற பள்ளத்தாக்கு
நிறை சேறு
நீறாகா துயர்
நீ
தனிமையாக்கப் படுவாய்
மற்றவர்களால்
ஒருமையாக்கப் படுவாய்
உன்னால்
நீ மட்டுமே
உன்னால் உன்னை
ஆனந்திக்க முடியும்

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (30-Nov-15, 8:47 pm)
Tanglish : orumai
பார்வை : 143

மேலே