வைரம்
கிறுக்குப் பயலே
தகர்த்தெறி !
நிகழ்காலத்
தெருக்களில் நட !
பருவத்தை தவறவிட்டு
பிறகு நச்சு விதையாய்
முளை கொள்ளாதே !
உள்ளத்தைப் பண்படுத்தி
உலக வீதியில் உலா வா !
சிறந்த நூல்களை அசை போடு
சீரழிக்கும் சமூககிருமிகளை
சீர்திருத்தி அழித்துக் கொல் !
ஞானத்தின் தொடக்கத்தை
அலசிப்பார்
விழிப்புணர்வு கொண்டு
சிந்திக்கத் தொடங்கு
உன் இரத்த அணுக்களில்
பரவ விடு
அதனோடு சங்கமித்து நனை !
கணக்கில் அடங்காத
கணணிகளின் கருத்தலைகள்
அல்லவா உன் மூளைக்குள்
கருக்கொண்டுள்ளன
உன்னை முடுக்கி விடு - அது
விண்ணைத் துளைக்கட்டும்
மண்ணில் ஜெயிக்கும்
மானுடன் நீ
மண்ணிற்குள்ளும்
ஒளிர்ந்து கொண்டே ........