இன்பச்சுவை
செம்மண் புழுதியில்
தவழ்ந்ததுண்டா
சேற்று வயலில்
தாண்டதுண்டா
வரம்பிலே சறுக்கி
வீழ்ந்ததுண்டா
வடிகால் கடவான்
வெட்டியதுண்டா
தொட்டாற் சிணுங்கி
தொட்டதுண்டா
தோலகற்றி கொம்மட்டி
தின்றதுண்டா
கிளிக்குத் தடம்
வைத்ததுண்டா
கீரியைக் கண்டு
ஒழித்ததுண்டா
சேறுண்ட கால் பொருக்கு
உரித்ததுண்டா
சோறுண்டு வாய்க்கால் நீர்
தாகம் தீர்த்ததுண்டா
ஒற்றைக்கண் பனம்பழத்தை
உண்டதுண்டா
பற்றைக்குள் பதுங்கி கள்
குடித்ததுண்டா
காற்றை முழுமையாய்
சுவைத்ததுண்டா
நாற்றை சந்தத்தில்
நட்டதுண்டா
ஏடென்ன எழுத்தென்ன
இவ்வின்பம் வென்றதுண்டா
பாட்டென்ன படித்தென்ன
பயிரின்பம் நின்றதுண்டா