உயர்வுக்கு அடையாளம்

தவறுகளை அனுமதியா திருப்பதே
திறமையின் திறவுகோல் ஆகும் - அதுவே
வெற்றியின் அளவுகோல் ஆகும்

மறதிகளை அண்டவிடாமல் தவிர்ப்பதே
மாறுபாடில்லா வழித்துணை ஆகும் - அது
முயற்சியால் திருவினை ஆகும்

எதிர்ப்புகளை எதிர்ப்படாமல் முறிப்பதே
ஏறுமுகத்தின் பீடுநடை ஆகும் - அது
எதிரிக்குப் புலப்படாமற் போகும்

வெறுமைகளைப் புறங்காணச் செய்வதே
வெற்றிக்கு வித்தாய் ஆகும் - அது
உயர்வுக்கு அடையாளம் ஆகும்

எழுதியவர் : குழலோன் (22-Nov-15, 9:03 pm)
பார்வை : 524

மேலே