வரும் தினம் வரும்

வரும் தினம் வரும்

வாழும் காலம் போய் கொண்டு தான் இருக்கிறது
வாய்ப்புகள் உயர வந்து கொண்டு தான் இருக்கிறது

போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது
வெற்றி கூட உன் அருகில் தான் நின்று கொண்டுதான் இருக்கிறது

விடா முயற்சி செய்து நீ அழைக்கா விட்டால்
வெகு தொலைவு போய் விடும் வெற்றி என்ற பொற்க் காலம்

வீண் முயற்சி என்று விட்டு விட்டால் தொலைந்து போகும் எதிர் காலம்

நடந்ததை பாடமாய் சொல்லும் கடந்த காலம்
நிற்காமல் ஓடும் நொடி முள்ளாய் நிகழ் காலம்

இலக்கோடு புறப்பட்டால் எட்டி பிடிக்கும் தூரத்தில் வானம்
சலிப்போடு யோசித்தால் கைக்கு எட்டுவது கூட வெகு தூரம்

வாசமுள்ள வசந்த காலம் வரவேற்கும் நாளும்
நீ வாழ்க்கை கடலில் நீந்த கற்றுக் கொண்டால்

எதிர் பார்க்காமல் நீ செல்லலாம்
எதையும் சமாளிக்கதெரிந்து விட்டால்

பயம் கூட பாரமாகும் தைரியம் இல்லா விட்டால்
வெற்றி காற்றை சுவாசிக்க வேண்டுமென்றால்
வென்றாக வேண்டும் தினம் தினம்.

எழுதியவர் : உங்கள் நண்பர் மை சூ பா (22-Nov-15, 4:40 pm)
பார்வை : 153

மேலே