ஏலே பித்துக்குளி
ஏலே பித்துக்குளி!
'ஏன்டா, கிருக்கு மாதிரி
நீயே சிரிச்சிண்டிருக்கே? '
"நம்ம பார்த்தசாரதி வந்துட்டுபோனான்! "
' யாரு பள்ளிக்கூட வாத்தியாரா? '
" ஆமாம் "
' அதுக்கு நீ ஏன் சிரிக்கிறே '
" பள்ளி பிள்ளைகளுக்கு
எல்லாம் புஸ்தகம்
School Bags எல்லாத்தோடையும்
அடுத்த வருஷம்
செருப்பும் தரப்போராங்களாம்..
அதனாலே அத்தனை பசங்களோடே
பாத அளவையும்
ஒவ்வொரு பள்ளி வாத்தியாரும்
அனுப்பனுமாம்.. "
' அடப்பாவமே ஒவ்வொரு பய காலை பிடிச்சுண்டு
தொங்கனும்னு
சொல்லு! '
" அதான் இப்படி
சோர்ந்து
போயிட்டான்..
அவனை ஊக்குவிப்பதற்காக
நான்,
' நல்ல வேளை
இந்த மட்டும்
ஜட்டி இலவசமா
கொடுக்காம
இருக்காங்களேன்னு'
சந்தோஷப்படு '
ன்னேன்..
ஒரே சிரிப்பு
' சத்தம் போட்டு
சொல்லிடாதேடா
மேலிடத்திலே
காதிலே விழப்போரதுன்னுட்டு
போரான் பாவம்! "
'இதென்னடா
உன்னுடைய
குரலா? '
" ஆமாம்..
' செருப்பால் உயர்ந்திட்ட மக்கள், மறுக்காமல்,
வாக்களிப்பர் வாழை இலையில்! '
எப்படி நம்ம
குரல்டா,
பித்துக்குளி?'
'தலை சுத்தரது! '