மாமியார்
மாமியார்.....
-----------------
சிறு பெண்ணாய் இவள் வலம் வந்தாள்...
சிட்டுக்குருவி போல் ஆசையோடு பறந்தாள்
கிடு கிடு வென வளர்ந்தாள்...
மணப் பெண்ணாய் அமர்ந்தாள்..
வெட்கத்தில் தலை குனிந்தாள்,,
கருவை வயிற்றில் சுமந்தாள்
தாய் என ஆனாள்
பாசத்தை பொழிந்தாள்...
மகனும் வளர்ந்தான்
மணமேடை நோக்கிச் சென்றான்
மனைவி கைப் பிடித்தான்
இவள் மாமியார் ஆனாள்..
பெண்ணாகி, தாரமாகி, தாயாகி இருந்தாள்..கருணை உள்ளத்தோடு
மாமியார் ஆனதும் ஆணவம் தலை தூக்கியதோ?
என்ன இது மாயம்????
ஆனால் இவளும் பெண் தானே!!!
மைதிலி ராம்ஜி

