ஊமை நிமிடங்கள்

பேச நினைத்த
வார்த்தைகள் அனைத்தும்
ஊமையாய் ஒரு புறம் நிற்க
வெட்கம் வேண்டாமேனவே
விலக சொல்கிறது
அருகருகே நாம் இருந்தும்
அதிக தூரமாகவே கிடந்து தவிக்கிறது
நம் காதல் வார்த்தைகள்
ஒரு கணம் சொல்லிவிடலாமென
தைரியமாய்
உனை பார்த்த நொடியில் நீயும் பார்க்க
சட்டென படபடத்து வாயடைத்து நிற்கிறது
காணாமல் போன தைரியத்தை
தேடியவாறே
என் இதயம்
நீயாவது சொல் என
என் இதயம் மெளனமாக உரைத்ததை
நீ உணரவில்லை போலும்
அதனால்தான் என்னவோ
மௌனமாகவே கரைந்து கொண்டிருந்தது நிமிடங்களனைத்தும் .....