எல் நினோ - பருவமாற்றம்

எல் நினோ - பருவமாற்றம்

நான் பெரு வளர் நாடுகளின் புண்ணியம்.
சிறு குறு நாடுகளின் பாவம் ஆனேனோ?
ஆம், பசிஃபிக்கின் வெப்பமாற்றம்.
இந்திய பெருங்கடலின் துயரேற்றம்.
வளர்நாடு தரும் மீத்தேன், கரிஅமிலம்.
பல நாடுகளுக்கு பருவமாற்றம்.
புவி வெப்பமாதலும் என் மூத்தோனே!
மானுடர் தம் பெற்ற வளர்ச்சி
இயற்கை கொண்ட பெரு வீழ்ச்சியே!
மரம் வளர்க்கும் அறச்செயலால்
சற்றேனும் மாண்புறும் இந்த மானுடமே!

************************************************************

எழுதியவர் : து. கிருஷ்ணமூர்த்தி (13-Dec-15, 4:09 pm)
பார்வை : 103

மேலே