ஆன்மாவின் இயல்பு
#ஆன்மா.
ஆன்மாவை அறிந்து அதனுடன் ஒன்று படுத்திக்கொண்டு வாழும்போது இறை நிலை அடைகிறோம்.
அந்த ஆன்மாவின் இயல்பு என்ன?
ஆன்மா அசைவற்றது. ஒன்றேயானது, அதாவது அனைவருக்குள்ளும் ஒன்றேயாக இருக்கிறது.
மனதைக்காட்டிலும் வேகமாகச் செல்லக்கூடியது. அதனை இந்திரியங்கள் அடைய இயலாது. ஏனெனில் மனம் இதனை அடைவதற்கு முன்பே இது சென்றுவிடுகிறது. ஓடுகின்ற தனக்கு வேறாக உள்ள இந்திரியங்களை இது முந்துகிறது. அதே சமயம் அது அசைவற்று இருப்பதால் பிராணன் அனைத்தையும் இயக்குகிறது.
ஒரு பொருள் அசையவோ இயங்கவோ வேண்டுமானால் அந்த இயக்கத்திற்கு ஓர் இடம் வேண்டும். எங்கும் நிறைந்த ஒன்று எங்கே அசையும்?
எனவேதான் ஆன்மா அசைவற்றது. எந்த ஓர் இயக்கமும் நடைபெற வேண்டுமென்றால் இயங்காத ஒன்று அதற்கு ஆதாரமாக வேண்டும்.
உதாரணமாக, ஒரு ரயில் வண்டி ஓடவேண்டுமானால் அதற்கு அசையாத தண்டவாளம் ஆதாரமாக வேண்டும். திரைப்படம் இயங்க வேண்டுமானால், அதற்கு அசையாத ஒரு திரை ஆதாரமாக வேண்டும்.
அவ்வாறே, இந்த உலகின் இயக்கங்கள் அனைத்திற்கும் பிராணன் (காற்று) தேவைப்படுகின்றது. இந்த அசைகின்ற பிராணன் இயங்குவதற்கு அசைவற்ற ‘ஆன்மா’ ஆதாரமாக உள்ளது.
-ஈசாவாஸ்ய உபநிஷதம்-