நீயும் நானும்

பகலில் எழுதிய கவிதைகள்
இரவில் உன் குரலில் பாடலடி
என் கவிதைகளின் தேடலில்
ஏமாற்றமே காதலானதோ..
மிதமிஞ்சிய கற்பனைகளின் வெளிப்பாடே கவிதை
அதீத பாசத்தின் வெளிப்பாடே என் காதல்
கவிதைகளின் மாலை கோர்த்தேன்
மாலையில் காகிதம் கூட காணவில்லை
கவிதைகள் தொலைந்தன - வருத்தப்படவில்லை
காதல் பேசிட
நீயும்,நானும் மட்டும்
மீதமிருந்தால் போதும்.