நீர்நிலை காப்போம் நீர்நமைக் காக்கும்

ஒரு கோடி வீடு
உட்கார ஒரு ஓரமில்லை
நிற்கவிட்டது தெருவோடு

மினுமினுக்க முகப்புதனில்
சொகுசுக் காரு
மிதந்து மிதந்து போனதெங்கே
பார்த்ததாரு

மாடுலர் கிச்சனென்று
மார்பிளிலே கலை
மாரளவுத் தண்ணீரில்
கையேந்து நிலை

இறக்குமதிப் பஞ்சணைகள்
ஈரத்திலே மிதந்தது
உறங்க வழியில்லாமல்
இருவிழிகள் பூத்தது

கலைநயமாய்க் கொண்டுவந்த
கண்ணாடி அலமாரி
கதவுதாண்டிப் போனதடி
காற்றுவழி திசைமாறி

பயிரழித்துப் பணம் சேர்த்த
மூடரை
பரிதவிக்க விட்டதின்று
காடுகரை

மறுத்தார்கள் தூர்துடைக்கக்
குளங்களை
மழையின்று தூர்துடைத்தான்
மனங்களை

தொலைநோக்குச்
சுருங்கி நின்றான் கோழை
கைகொட்டிச்
சிரித்துவிட்டான் வான்மழை

உதவியிலும் விளம்பரத்தை
ஒட்டிவைக்கும் இழிவினம்
பட்டபின்னும் திருந்தவில்லை
படிக்கவில்லை மானுடம்

இயற்கையோடு இயைவதுதான்
வாழ்கை என்று படி
இல்லை இல்லை
என்று சொன்னால்
இப்படியே செத்து மடி

எழுதியவர் : மீ.மணிகண்டன் (16-Dec-15, 12:50 pm)
பார்வை : 262

மேலே