நான் பயம்

இருளுக்கு நான் பயம்
அந்த இருளை தரும்
இரவுக்கு நான் பயம்

நரியின் ஊளை
ஆந்தையின் முனகல்
உச்சி வானில் நிலா
அந்த பௌர்ணமி
இரவுக்கு நான் பயம்

பாம்புகளின் நடமாட்டம்
பேய்களின் அட்டகாசம்
வௌவாலின் இரைச்சல்
அந்த அமாவாசை
இரவுக்கு நான் பயம்

மின்னலின் மர்ம ஒளி
பேயாய் முழங்கும் இடி
சுழன்று வீசும் காற்று
அந்த மழை இரவுக்கு
நான் பயம்

மொத்தத்தில் என்னை
தனிமை படுத்தும்
எல்லா இரவுக்கும்
நான் பயம்

எழுதியவர் : fasrina (17-Dec-15, 9:32 am)
Tanglish : naan bayam
பார்வை : 306

மேலே