ஆதி ஆகம பீப் சாங்க்

உங்கள் மறைகளை ஓதினால்
நாவை அறுப்பேன் என
எமக்கு கட்டளையிட்டு
நீங்கள் வந்து ஓதியபோது
உணர்ந்து கொண்டோம்
மொத்தமும் ஆபாசம்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
நிறைந்தவை அவை
கொலை கொள்ளை சூது
பிறன்மனை மேவுதல்
கள் உண்ணல் நர மாமிசம்
பல தாரம் பல புருஷர்
மிருகத்தோடு கலவி
எல்லாம் செய்தும்
உங்கள் இச்சை அடங்கவில்லை
அந்த பீப் சாங்க நீங்களே பாடுங்க...

தோடுடைய செவியன்
விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசி
என் உள்ளங்கவர் கள்வன் ....என ஈசனையும்

அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு...என எம்பெருமானையும்
நாங்கள் வணங்க
எமக்கு உரிமையுண்டு.

எழுதியவர் : ராம் வசந்த் (17-Dec-15, 10:10 am)
பார்வை : 109

மேலே