முதல் கவிதை
காதலை சொல்லவும் காதல் கொள்ளவும்
பல கவிஞர் தோன்றியதுண்டு காதல் கடிதத்தில் .
இதோ இங்கு ஒரு கவிஞ்சி தோன்றினால்
கடிதத்திற்கு பதிலாக புத்தகத்தில் இருந்து ...
அன்று ஒரு நாள் அவன் மேஜையில் என் புத்தகம்
அவனை கவர்வதற்காக சின்ன கவிதை கிறுக்களில்.
அன்று தான் எழுதினேன் என் முதல் கவிதை
என் கவிதை பயணத்தின் தொடக்கமாக..
முதல் கவிதை என்னமோ அவனிடம் சென்றதொ இல்லையோ
என் புத்தகம் மட்டும் எனிடம் பத்திரமாக வந்தது .