ஹாரிஷ்ஜெயராஜ்

உணர்வை பிழிந்து,உயிரில் உறைந்து,
இதயம் கரைந்து.கவலை மறைந்து,கனவைகூட்டிடும்,
உன் கரம் மீட்ட இசை.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாய்..
காதல் மனைவியின் வருடல் போல் இதமாய்..
மதுகுடித்த வண்டாய் உன் இசையில் மனம்.
ததும்பிடும் இன்பத்தில் வீசிடும் மணம்.
எங்கிருந்தாயடா இதுவரையில்?
மிதக்கிறோம் உன் இசையில்
உடல் மட்டும் தரையில்..
உன் சாந்தமுகமும்,காந்தவிழியும்
கண்முன்னே தெரிய,
உன் தாலாட்டும் இசையில்
பலர் கவலை கரைய.
எங்கள் வலிபோக்கும் மருந்தே,உன் இசை செவிக்கு பெரும் விருந்தே..

எழுதியவர் : கு.தமயந்தி (17-Dec-15, 8:38 pm)
பார்வை : 97

மேலே