மாமன் மகளின் காதல்

மல்லுவேட்டி
மாயக்காரா...
என்ன தூக்கிகிட்டு
போடா ...
அ(ஆ)யிர மீனா ...


மாமன
நெனச்சுதான்
அள்ளிக்கிறன்
தலையணையை ....


நேரம் பாத்து
சாடை பாத்து
மச்சான்
குடிசை கட்டி
தாலி கட்டி
வாழ்ந்து பார்க்க
ஒத்திகை நடக்குதா....

நடிப்பு இருக்கு
வெறுப்பு இருக்கு
குறை சொல்லி ரசித்திடத்தான் ...

ஆசை இருக்கு
வெட்கம் இருக்கு
முத்தமிடத்தான் ...

சித்திரை நிலவே ...
நித்திரை மலரே ...
முத்திரை சிலையே ...
உறையுது மனமே ...
கரையுது சினமே ...
மாமன பாத்தாநீங்க
சொல்லு வேகமா ...


மனசுல நெனைப்பா ...
நெனப்புல மனசா ...
அறியாம அல்லாடுறன்...
இந்த பேதை தான் ...

எழுதியவர் : prabavathi veeramuthu (17-Dec-15, 10:09 pm)
பார்வை : 198

மேலே