எமனுக்கு என்ன கோபம்

எறும்பு ஏமாந்து விட்டது
எலும்பில் கடித்து...

தசையின் தடிமன் தாராளம்
காகிதமாய்...

இரு விழி வீழ்ந்தது பெருங்குழியில்
மீள முடியா...

மண்ணில் பாதச் சுவடு
சுவடில்லை எடையால்...

என்பும் தோலும் தோழர்
நெடு நாளாய்...

கரங்கள் இரண்டின் கனத்தால்
வலி கொண்டது தோள்...

முடி முதிர்ந்து கொட்ட மறுத்து
கோபமாய் நான் ...

நகமும் பட்டு, அணைந்தது
அசை போடும் ஆசை??

எமனுக்கு என்ன கோபமோ? எடுக்க மறுக்கிறான் எனை!

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (23-Dec-15, 9:21 am)
பார்வை : 158

மேலே