விவசாயிகள்_தினம் டிசம்பர்-23
![](https://eluthu.com/images/loading.gif)
கோவனம்
கட்டிய கோடீஸ்வரன்...!!!!!
குருவிகட்டும் கூட்டைபோல
குடிசைவீட்டுக்காரன்...!!!
மாட்டு
வண்டியின் சொந்தக்காரன்...!!!
மம்பட்டியின் தோழன்...!!!
மண்புழுவின் நண்பன்...!!!
வெட்டுகிளியின் எதிரி...!!!
எலியின் எமன்...!!!
யார் அவன்...???
படைகண்டு நடுங்கும்
பாம்பை தினம் சந்திப்பவன்...!!!
தன்
தாகத்திலும்
தளறாது
தண்ணீர்
பாய்ச்சு பவன்...!!!
தனக்கு
உணவில்லா விட்டாலும்
பயிர்க்கு உரமிடு பவன்...!!!
சிறுவிதையை
மரமாக்கு பவன்...!!!
அதற்குதன்
வியர்வையை
உரமாக்கு பவன்...!!!
வருடம் வருடம்
தவம் புரிபவன்
தன்
வரத்திற்கு அல்ல
மழை வரவிற்கு...!!!
ஒன்று இரண்டு
படிக்காதவன்
மூன்று போகம் விளைவிப்பவன்...!!!
அதற்கு
விலைவைக்க தெரியாதவன்...!!!
யார் அவன்...???
#விவசாயி...!!!
இன்று அவனுக்கோர்
தினமிருப்பதை
அறியாம லின்றும்
உழைத்து கொண்டிருப் பவன்...!!!
#விவசாயிகள்_தினம்_டிசம்பர்_23
அவன் சேற்றில் கால் வைக்க
மறுத்தால்
எவனும் சோற்றில் கை வைக்க முடியாது...!!!
அரிசியை
இன்டர்னெட்டில்
டவுன்லோடு
செய்ய முடியாது...!!!
#விவசாயத்தை_பாதுகாப்போம்
இவன்
பிரகாஷ்