இயற்கை அன்னையை பறை சாற்றுவோம்

இறப்பு என்பது நாம் தேடிக்கொள்வது அல்ல. இயற்கையிலேயே படைக்கப்பட்ட ஒன்று. தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் நாம் பிறப்பு என்னும் உணர்வை வெளிக்கொணருகிறோம். பிறப்பு என்னும் நிலை உருவானதற்கு பிறகு அடுத்த கட்டம் நம்முடைய வாழ்க்கை இறப்பு நோக்கி அடியெடுத்து வைக்கிறது என்பது தான் உண்மை. இப்பிறப்பு மற்றும் இறப்புக்கு இடையில் இருப்பது தான் வாழ்க்கை. இதற்கு இடையில் இறப்பை நாம் கையாள்வது என்பது சரியல்ல. (கடவுள் மற்றும் இயற்கை அன்னையால் படைத்து நம் தாயின் கருவறையில் உண்டான நாம், வாழ்க்கையை புரிந்து செயல்பட வேண்டும்.) வருகின்ற பிரச்சன்னையை பொறுமையுடன் புரிந்துகொண்டு தூய்மையாக (அல்லது) முழுமையாக அதிலிருந்து விடுபட வேண்டும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே நம்மை வழிநடத்திச் செல்வது இயற்கையே?