ஆதலினால் காதலித்தேன்- பொள்ளாச்சி அபி நாவல் பற்றிய சில எண்ணங்கள்- 3
24.12.2015
ஆதலினால் காதலித்தேன்- பொள்ளாச்சி அபி
நாவல் பற்றிய சில எண்ணங்கள்- 3
நமது அன்றாட வாழ்வில், மனிதனாகஇருப்பதற்கு , நடந்து கொள்வதற்கு, தேவையான அத்தியாவசிய குணங்களை கற்றுத்தரும்ஆசான்கள் மீது ஏற்படுகிற மரியாதையும், பக்தியும், ஒரு காதல் என்கிறார், நம் அபி சார் :கண்ணியம் நிறைந்தவர்களை ,காதலிக்கிறார்..இப்படி:
பெண்களை அநாவசியமாகசீண்டுவதோ,தேவையில்லாத உரிமையை எடுத்துக் கொள்வதோ,அதைக்காட்டி அத்துமீறுவதோ கூடாது என்பதை அவளிடம் நான் முதன்முதலாகக் கற்றுக் கொண்டேன்.பெண்கள் தங்கள் மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளும்எந்தவொரு நடவடிக்கைக்கும் குறுக்கே பாய்ந்து ஆண்கள் கெடுத்துவிடக்கூடாது என்பதைதனது நடவடிக்கையால் அவள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தாள். ஆதலினால் நான்காதலித்தேன் அவளை...!. இப்போதும்காதலிக்கிறேன்.!
அவள் பெயர் வசந்தி.!……
******
உழைப்பை மட்டுமேமூலதனமாகக் கொண்டு உயர்ந்து நிற்கும் நேர்மையாளர்கள் மீது காதல் செலுத்தலாம் இப்படி , என்கிறார் இன்னொரு பெண்ணை பார்த்து பழகியதில்
அபி: “அம்மா இவள் இங்கே எதற்கு வந்தாள்.? அதுவும் நம்ம வீட்டுப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறாள்.அவங்கெல்லாம்பிராமின்மா.!” அவள்: உங்க அம்மாவிடம்சொன்னபோது அவர்களும் படிப்புச் செலவுக்குத்தானே,பணம் தருகிறேன் என்றுதான் சொன்னார்கள்.நான்தான் சும்மாவொன்றும் எனக்குவேண்டாம்.முடிந்த வேலையை ஒருமணிநேரம் செய்து தருகிறேன் என்று அவர்களைவற்புறுத்தித்தான் சம்மதிக்க வைத்தேன்.எந்த வேலையும் செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டுபோக எனக்கு கூச்சமாயிருக்கிறது. தவிரவும் பிச்சை வாங்குவதுபோல சங்கடமாயும்இருக்கிறது.” அபி: உழைப்பின் மேல் அவள்வைத்திருந்த நம்பிக்கை எனக்குள் ஆழமாக நங்கூரமிட்டது.உழைப்பின் மகத்துவத்தைமுதன்முதலில் அவளிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன்.., ஆதலினால் நான்காதலித்தேன் அவளை...!. இப்போதும் காதலிக்கிறேன்.!.
அவள் பெயர் மீனாட்சி.…..
******
தனது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு நாம் முயற்சிகள் எடுக்கும் காலத்தில் ஏகலைவனாக இருக்கும் நமக்கு சிலதுரோணர்கள் கிடைத்து விடுவதுண்டு.. பின்னாளில் சமூகப் பார்வையோடும் சேவை மனப்பான்மையோடும் நாம் மாறுவதற்கும் கூட காரணியாக இருக்கும் அவர்கள் மீது என்றும்மாறாத மரியாதை ஏற்படுவதை பற்றி குறிப்பிடுகிறார்இவ்வாறு , இன்னொரு பெண்ணின் பழக்கத்தில்:
சினிமாப் பாடல்மெட்டுக்கென தனியாகப் பாடல்கள் எழுதத் துவங்கினேன்.மெட்டுக்குள் அடங்காதவார்த்தைகளையிட்டு எழுதியதெல்லாம் கவிதையென்று ஆயிற்று.!. எப்படியோ தொடர்ந்துஇதுபோன்ற பயிற்சிக்கு தூண்டுதலாக நான் நாள்தோறும் ரசித்துவந்த‘அவள்’இருந்தாள்.காதல்பாட்டுக்கள்,அதன்பின் இயற்கை, மனிதனின் செயற்கை,செயற்கைக்கானகாரணம்,அதிலிருந்து மீட்சிக்கான வழி,போராட்டம் என பின்னாளில் மாறிப்போன எனது வாழ்க்கையின்மிகமுக்கிய காரணியாக அவளே இருந்தாள். ஆதலினால் நான்காதலித்தேன் அவளை...!. இப்போதும்காதலிக்கிறேன்.!.அவள் பெயர் தாகீரா..!...
*****
பிற பெண்களிடம் பழகும்நெறிகளை கற்பிக்கும் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறார் பின்னர்..இவ்வாறு:
ஆண் என்பவன் திருமணம்செய்துகொள்ள மட்டுமே ஒருபெண் என்ற அளவில், பெண்களைக்குறித்துப் புரிந்து வைத்திருந்த நான்,மெதுவாக அந்தப்பிரமையிலிருந்து விடுபடத்துவங்கினேன்.வயதுவந்த ஆண்,பெண் இடையே உறவு என்பது காதலாக மட்டும்தான் இருக்க முடியும் என்ற எனதுபேதைமையான எண்ணத்தை முற்றிலும் தகர்த்து தவிடு பொடியாக்கினாள் அவள்.அந்தத்தெளிவுக்காகவும்,துணிச்சலுக்காகவும் அவளைநான் மிகவும் மதித்தேன். நீண்ட நாட்கள் பழக்கம்கொண்ட இரு நண்பர்கள்..அதில் ஒருவர் பெண் மற்றொருவர்ஆண்.அவ்வளவுதான்..!.உள்ளங்களால் இணைந்த நட்பெனும் அன்புக்கு,உருவங்கள் வேறாயிருந்தால்தான் என்ன.? என்று தனதுநடவடிக்கையால் நிரூபித்துக் கொண்டேயிருந்தாள் அவள்.இப்போதும் அவள் அப்படித்தான்.!
இப்போதுவரை எனதுநட்புவட்டத்திற்குள் இருக்கும் பெண்கள் அனைவரிடமும் மரியாதையாகப் பழகுவதற்கும்,25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வட்டங்கள் நீடிப்பதற்கும்முதல்புள்ளியை அவள்தான் வைத்தாள். ஆதலினால் காதலித்தேன்அவளை.! இப்போதும்காதலிக்கிறேன்.!
அவள்பெயர் ‘சரோ’ என்கிற சரோஜாரங்கசுவாமி..
***
இந்த உன்னதமான சிந்தனைகளைக் கொண்டு காதல் என்ற வார்த்தைக்கு உரிய வேறு பல பரிமாணங்களை இன்னும் சொல்கிறார் அபி சார்!
(தொடரும்)