எல்லாம் வல்ல அல்லா

மூன்றெழுத்துப் பிள்ளை…
அல்லா என்றச் சொல்லை..
நாமும் முழங்குவோம்-அவர்
நாமம் முழங்குவோம்..!

அல்லா லாயி அல்லா - நீதான் எமக்கு எல்லாம்
அல்லா லாயி அல்லா - நீதான் எமக்கு எல்லாம்..!

முகம்மதுநபியின் முதுமொழியை
முகநூலில் வெளியிடுவோம்
காயிதேமில்லத் கருத்துறையை
குறுஞ்செய்தியில் பங்கிடுவோம்

மெக்காவுக்கு விரைவில் சென்று
பாவங்களை தொலைத்திடுவோம்
மெதினாவுக்கு அருகில் சென்று
புண்ணியங்களை சேர்த்திடுவோம்

அய்ந்து வேளைகள் தொழுகின்றோம்
அல்லாவின் நினைவாக வாழ்கின்றோம்
ஆதி அவனின் நாமம் சொல்லி
கோரியில் கூழ் வழங்குகின்றோம்

அல்லா லாயி அல்லா - நீதான் எமக்கு எல்லாம்
அல்லா லாயி அல்லா - நீதான் எமக்கு எல்லாம்..!

நோய்க்கண்ட குழந்தைகள்
கோரிநோக்கி வருகின்றனர்
தொழுகை முடித்து வரும்போது
முகத்தில் ஊதச்சொல்லி பணிகின்றனர்

அல்லாவின் கிருபையால்
பிணிகள் குணமடைகிறது
பிணித்தீர்ந்த பிள்ளைகள்
அல்லாவை வணங்கி மகிழ்கிறது

எம்மதமும் சம்மதம்
அல்லாவுக்கு எப்போதும்
எல்லாம்வல்ல அல்லாவுக்கு
அணைத்துமே அர்ப்பணம் !

அல்லா லாயி அல்லா - நீதான் எமக்கு எல்லாம்
அல்லா லாயி அல்லா - நீதான் எமக்கு எல்லாம்..!

மதத்தின் அடிப்படையில் ஜகத்தைப் பிரிக்காதீர்
ஜகத்தை ஆள்வோரே மதத்தை பரப்பாதீர்
யுகங்கள் எத்தனையோ யுத்தங்கள் கண்டாலும்
மதங்கள் அனைத்தும் முழங்குவது அமைதி ஒன்றைத்தான்!

தீவீரவாதத்தை வளர்ப்பது தேசத்தின் வேலையில்லை
சாந்தத்தை வளர்ப்பதே தேசத்தின் தலையாய வேலை
ஆசீர்வாதம் அளிப்பது பெரியோரின் பொதுவுடமை
அர்பணிப்பு திறனிருந்தால் அகிலமே உன்னுடமை

அல்லா லாயி அல்லா - நீதான் எமக்கு எல்லாம்
அல்லா லாயி அல்லா - நீதான் எமக்கு எல்லாம்!

(அனைத்து இஸ்லாமிய தோழர்களுக்கும் இப்பாடல் அர்ப்பணம்)

எழுதியவர் : இரா.மணிமாறன் (24-Dec-15, 8:05 pm)
Tanglish : allaa
பார்வை : 102

மேலே