இறக்கும் பிழைகள் தானாக

இறக்கும் பிழைகள் தானாக //////
===========================================
இழையளவு தேய்ந்தாலும்
பிழையாக தெரியுது பிறைநிலவு....

பிழையுள்ள சமுதாயம்
பிறந்தோமே நாம் இதைக்காண ....

பிழையுள்ள பாதையில்
பிழையுணரா சமூகத்தின் பயணம் ....

பிழையென்பர் பிறப்பினை
பிதற்றுவர் இறப்பிலும் சாதிமதமென ....

பிழைகளை களைவோம்
இறக்கும் பிழைகள் தானாக ...

பழனி குமார்
26.12.2015
--------------------------------------------------

எழுதியவர் : பழனி குமார் (25-Dec-15, 10:31 pm)
பார்வை : 82

மேலே