தினம் ஒரு சட்டம் 02
தினம் ஒரு சட்டம் - குழந்தையிடமிருந்து திருட வேண்டும் என கடத்தினால் என்ன தண்டனை
----------------------------------
இ.த.ச 369
யாராவது, ஒரு குழந்தையையோ அல்லது பத்து வயதுக்கு குறைவானவரையோ ஒரு நகையை எடுக்க வேண்டும் அல்லது அவரிடமிருந்து அந்த நடமாடும் சொத்தை பிடுங்க வேண்டும் என கடத்தி செல்வதும் அல்லது கவர்ந்து செல்வதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் சேர்த்து அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
நன்றி ;செந்தில்குமார்