சில நினைவுகளில்----------------------நிஷா

வெள்ளைப் பனித்துளிகள் விலாசமிட்ட
பச்சைப் புல்தரை மீது முதன்முதலாய் என்
பாதம் வரைந்திட்ட கோலம்......

மின்னும் நட்சத்திரங்களை
மீண்டும் மீண்டும் எண்ணி
மழலை மொழி பேசும் என் விரல்கள்....

வண்ண மலர் மீது வந்தமரும்
வண்ணத்துப்பூச்சி என்
கன்னக்குழியில் கவிபாடுமா என்ற ஏக்கம்....

கரை தொட்டுச் செல்லும்
கடல் அலையோடு கரைபுரண்டு
காதல் சொல்லும் என்னுள்ளம்....

தூரத்தெரியும் கலங்கரை வெளிச்சத்தை
தூக்கிக் கையில் நிறுத்தி
குதூகலிக்கத் துள்ளும் மனம்....

மணலோடு நான் விளையாடி
மனிதநேயம் கற்றுக்கொண்ட
மறக்க முடியா மழலைப் பருவமது..
.
என் அழகான கடற்கரை கிராமத்தை
காதலிக்கிறேன் இன்றும்
பழைய நினைவுகளோடு....

எழுதியவர் : நிஷா (26-Dec-15, 5:16 pm)
பார்வை : 175

மேலே