அண்டங்காக்கா கொண்டைக்காரி
தோழர் லியோனியின் பட்டி மன்றத்திலிருந்து ஒரு கலகலப்பு: படிங்க,சிரிங்க.
-----------------——------------------
பேச்சாளர்: அண்டங்காக்கா கொண்டைக்காரி பாட்டு ஒரு சாமி பாட்டாகும்?
லியோனி: என்னய்யா சொல்ற அது சினிமா பாட்டய்யா.
பேச்சாளர்:அண்டம் என்றால் உலகம்,காக்கை என்றால் காப்பவள், கொண்டை வைத்த மீனாட்சியை அண்டங்காக்கை கொண்டைக்காரி என கவிஞன் பாடியுள்ளான் நடுவரே,
லியோனி: அது சரி!!! அப்புறம் ஐயாரெட்டு சொல்லுக்காரியும் சாமி பாட்டாப்பா?
பேச்சாளர்:நடுவர் அவர்களே! அஞ்சென்றால் நமசிவய, ஆறு என்றால் சரவணபவ, எட்டென்றால் ஓம்நாராயணநம இதுதான் ஐயாரெட்டு சொல்லுக்காரி,
லியோனி: அடேயப்பா! !! இந்த ரண்டக்கா ரண்டக்கா ரண்டக்கா னா என்னப்பா இதும் சாமி தானா?
பேச்சாளர்: சிவனுக்கு இருமனைவி அங்க போனா ரெண்டு அக்கா, முருகன் வீட்ல ரெண்டு அக்கா, பெருமாள் வீட்ல ரெண்டு அக்கா
அதான் ரண்டக்கா ரண்டக்கா ரண்டக்கா போதுமா நடுவரே?
லியோனி: அய்யா சாமி போதும்யா.