எழுதுகோலின் எண்ணம்

அறிவாளிகளின்
கைகளில் நானோர் கத்தி...
பிறர் அறிவுதனை
கூர்மையாக்க
என்றும் வருவேன்
சுற்றி...!
அறிவிலா சுயநலப்
பேதைகளின் கைகளில்
தவழும்
கூர் மழுங்கிய கோல்...
உலகையே
புரட்டக்கூடிய சிந்தனைப்
பெற்ற அறிஞர்தம்
கரங்களில் இடப்பட்ட
செங்கோல்!
விண்வெளியில்
வலம்வரும் கோள்களையே
வரைந்துக் காட்ட உதவும்
எழுதுகோல்!...
அறிவிலார் ஆவேசத்தில்
எடுப்பது வெட்டுக்கத்தி...
அறிவுடையோரென்றும்
கோபத்திலெடுப்பர்
என்னைப்'பற்றி'...!
"வாளின் முனையைவிட
பேனாவின் முனை
வலிமைவாய்ந்த"தென்றே
அறிஞர்தம் நாவினால்
புகழப்பட்டவன் நான்...!
இவ்வுலகில் பல
வடிவங்களில்
கிடைப்பினும் அவையும்
வேறல்ல...
என் சகோதரர்கள்தான்!!!
**********************

எழுதியவர் : Daniel Naveenraj (29-Dec-15, 10:15 am)
பார்வை : 118

மேலே