முயற்சி வெல்லும்

முற்றுணிந்த துணிபல்ல என்வாழ்க்கை
முயற்சியெனும் வித்திட்ட பெருங்காடு
பற்றுக்கோடு தன்னைச் சுற்றிப்
படர்கின்ற கொடிபோல் அன்றி - மண்ணைப்
பற்றி வலிமையாய் வேர்கள்,
பரப்புகின்ற பெருமரமாய் என்முயற்சி...
கற்றுத் தேர்ந்த பட்டறிவு என்றன்
காலத் துணையாய் வரவே,
~ என்முயற்சி வெல்லும், திண்ணம்...!

ஞா.நிறோஷ்
2015.12.28

எழுதியவர் : ஞா.நிறோஷ் (29-Dec-15, 8:36 am)
பார்வை : 225

மேலே