முறை

முறையாய் முறையை நம்முள்
புகுத்த முறையாய் அமையும்
நம் வாழ்வும் திரைமறைவில்
நாம் நிற்க நம்வாழ்வின்
மறையும் திறைமறை யாகும்
முறையாக அணுக நம்முள்
உள்ள குறையும் மறையும்
விரைவாக நிறையும் நிலையும்
நம்முள் மறைபொருளும் மாறாமல்
தெரியும் பறைசாற்றும் நம்திறமையை
வளர்பிறையாய் மாறும் நம்வாழ்வும்.

- செல்வா

எழுதியவர் : செல்வா (29-Dec-15, 8:15 am)
Tanglish : murai
பார்வை : 113

மேலே