உமக்கு நாமம் சூட்டியவர் எவரோ
இரட்டை குழந்தையாய்
பிறப்புமுதல் இறப்புவரை
பிரிவு ஒன்றை இங்கே
அறியாத பிள்ளைகள் தாங்கள்.......
ஜென்ம பாவத்தால் இறைவனின்
சாபம் பெற்றதாலோ தங்கள்
தோற்றமும் இருட்டறையென
பலர் வாழ்வில் இறுதிவரை
இருட்டையும் காட்டியவர்கள் தாங்கள்.......
அகிலத்தைக் காணவந்த முதல்நாளில்
உம்மைக்கான பலர்வந்தும் திங்கள் பல
கடந்தே தியானம் கலைத்தவர்கள் தாங்கள்.......
பதிவேற்றம் கொள்வதே பணியென
கொண்டு பயணம் தொடர்ந்து -தாம்
தலைகீழாய் கண்ட அனைத்தும்
எமக்கு இன்னல்கள் கொடுக்குமென
அவற்றை நேர்நிலைக்கு மாற்றியமைக்கும்
மகத்துவம் பெற்றவர்கள் தாங்கள்....
கரு நூலிழை வேலிகொண்டு
மெண்மை கதவிரண்டு தாம்கொண்டு
பிரம்மீடின் கோபுரம் தகர்த்து –அதில்
வானவில்லின் வளைவுகொண்டு
அன்னப்பறவை நிறம்கொண்டு
அதன் மையம்தனில் குண்டுமணியின்
செந்நிறம் மறைத்து கருமையில்
எம்மை காண்பவர்கள் தாங்கள்.........
குருதியின் பங்கில்லா
உயிரொன்று இங்கில்லை
எனினும் தம்மில்சிறு பிள்ளைக்கு
வாழ்வுள்ளவரை குருதியின்றியே
வாழ்வளித்தவர்கள் தாங்கள்....
இவ்வகிலத்தில் கதிரவனும்
மாரியும் மாறிமாறி போரிடினும்
கருத்தில் கொள்ளா எவர்தம்
உதவி நாடாது தன்னைத்தானே
காத்தருளும் தனித்தன்மை
கொண்டவர்கள் தாங்கள்.........
மகிழ்ச்சியும்-சோகமும்
சோம்பாலும்-சுறுசுறுப்பும்
விருப்பும்-வெறுப்பும்
மோகமும்-தாகமும்
காதலும்-காமமும்
குளிர்ச்சியும்-கொதிப்பும்
இவ்வனைத்தும் எவர்
அகத்தில் இருப்பினும்
எடுத்துக்காட்ட மறவாதவர்கள் தாங்கள்....
தங்களிடம் இவன் வினவுவது யாதெனில்
இத்தகு மகத்துவம் பெற்ற தங்களுக்கு
“கண்கள்” என நாமம் சூட்டிய
மாமனிதனின் நாமம் எதுவோ !?..........
*****************தஞ்சை குணா***********

