நீ ஏனடி கொண்டாய் கல்நெஞ்சத்தை 555

என்னுயிரே...

உன்னை மட்டும் நேசித்த
உள்ளத்தில் காயங்களையும்...

உன்னை மட்டும் சுவாசித்த
என் உயிர்...

உன் சுவாசம் இல்லாமல்
சுவாசிக்க தவிக்குதடி...

ஓடி திரிந்த என் விழிகளில்
கண்ணீர் குளமாக இன்று...

உன்னை நினைத்து நான்
தினம் தினம் வாடவா...

வாடாமல்லியை
பரிசளித்தேன் உனக்கு...

உன்னை நினைத்து மெழுகாய்
நான் உருகுவதற்கா...

நீ என்னை துரத்தி
துரத்தி காதலித்தாய்...

காதல் வயபடதா என்
கல்நெஞ்சை மென்மையாக்கி...

நீ ஏனடி கொண்டாய்
கல்நெஞ்சத்தை...

தோள்கள் மீது தலைசாய்திருக்கும்
காதலர்களை காணும் போதெல்லாம்...

என் விழிகள்
குளமாக மாறுதடி...

காத்திருக்கிறேன் கண்ணே...

நெடுநாள் இல்லை
என் வாழ்வு மண்ணில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Dec-15, 8:10 pm)
பார்வை : 405

மேலே