காதல் வலி
மனதில் ஆயிரம் ஆசைகள் கொண்டேன்..
கண்கள் திறந்து கனாக்கள் கண்டேன்!
நாளைய பொழுதை எண்ணி எண்ணி..
இன்றே நெஞ்சில் ஏக்கம் கொண்டேன்!
நிலை என்று அவளை எண்ணி..
நிரந்தரமாய் திட்டம் போட்டேன்.
நிலையற்ற வாழ்வினிலே..
நிரந்தரமாய் துணை வேண்டி..
நிம்மதி இழந்தே தவித்தேன்!!
துணை வந்து சேர்ந்ததுமே..
மனதில் பயம் வந்து சேர்ந்ததுவே!!
அவள் இன்பம்;
என் விருப்பமானதால்..
என் இன்பம்,
சற்று தொலைந்தே போனது!
அவளுடன் சேரும்..
நிலையில்லா நாளைக்காக..
நிஜமான என் இன்றை இழந்தேன்!!
பெண் போதைக் கொண்டேனோ?
காதல் அளவைக் கடன்தேனோ?
அவளைப் போலே நானும் நடந்தால்..
என்னுள்,
காதல் இல்லை என்றே உரைப்பாள்..
அதையே நானும் அவளிடம் சொன்னால்;
தன் கண்ணீரால் என்னைக் கைதியாக்குவால்!
இது ஆண்களுக்கே இழைக்கப்படும் அநியாயம்!
ஆசை கனவுகள் ஆயிரம் இருந்தும்..
முடிவொன்று கொண்டேன் இன்று!
என்னுடன் அவள் வாழ்வு விதியானால்..
நடப்பது தானே நடக்கும்!
வருங்காலம் வரும் நேரம் வரவேற்ப்போம்!
நிகழ்காலம் நிஜமென்று அதை ஏற்ப்போம்!!