புதிர் கவிதையிவள்

இது ஒரு புதுக் கவிதை
ஏன் இவளும் தான்..!!!
ம்ம்ம் இவளோர்
புதிர்கவிதையோ???

தேவதைகளை வர்ணிக்கும்
தேவன்களின் கவித் தெருவில்
அனாதையாக்கப்பட்டவள்
இவள்..!!
கவி பாட எழுந்தாள்
இவளதிகாரம் பாடவில்லை
ஆண்டாள் போல் அவனதிகாரம்
பாடும் இசையருவி ஆனாள்..!!
நிலவை பாடினாள்..
காற்றை பாடினாள்..
காதலை சாடினாள்
புதிராகிய அவனை தேடினாள்.
பூவாகிய அவள்
புதுமையாகி போனாள்.. !!
நிச்சயமாய் இவள் புதிர் கவிதைதான்..!!

இவள் நிலா

எழுதியவர் : இவள் நிலா (30-Dec-15, 11:29 pm)
பார்வை : 137

மேலே