பங்கசம் இங்கெ வாடி

அடியே பங்கசம், பங்கசம் இங்கெ வாடி. குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாடி.

என்ன பாட்டி? என்னக் கூப்பிட்டீங்களா?

ஆமாண்டி பங்கசம். கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டு வாடி.பாட்டி உங்ககிட்ட எத்தன தடவச் சொல்லியிருக்கேன். எம் பேரு பங்கசம் இல்ல. பங்கஜம், பங்கஜம், பங்கஜம். இனிமே என்ன பங்கசம் -ன்னு கூப்பிட்டீங்க எனக்குப் பொல்லாத கோவம் வரும்.


நா என்னடி பண்ணுவன் தாயீ? உங்கப்பன் என்னோட வாயிலெ நொழையாத பேர உனக்கு வச்சிருக்கானே
-----------------------------------------------------------------------------------
சமஸ்கிருத மொழியிலும் நேபாள மொழி (சமஸ்கிருத மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய இந்தி போன்ற நேபாள நாட்டு மொழி)யிலும் பங்கஜ் என்றால தாமரை என்று அர்த்தம். பெரும்பாலும் ஆண்பால் பெயர்களாகப் பயன்படுத்தப்படும் சொல் இது. பங்கஜ் என்றால் தாமரை என்று பொருள். தமிழர்கள் பங்கஜ் என்பதை பங்கஜம் என்று பெண்பால் பெயராகப் பயன்படுத்துகிறார்கள்.
----------------

Pankaj is a Hindu male given name, common in Nepal and India. It has its roots in the Sanskrit word paṅkaja which refers to the lotus flower. The word is a compound of paṅka 'mud' and the suffix -ja 'born from, growing in'.


-------------------
சிரிக்க அல்ல. சிந்திக்க. ,ழொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (30-Dec-15, 11:53 pm)
பார்வை : 131

மேலே