சகோதரி சத்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

சகோதரி சத்யாவிற்கு
சகலவளம் கிடைக்கவேண்டும்!
இதேபோன்றே இன்னும் பல பிறந்த நாளில்
எழுத்து நண்பர்கள் வாழ்த்தவேண்டும்!
கணினி காட்டிய கவிதைகளில்
காண கிடைக்கட்டும் மகிழ்ச்சிகளே !
தினமும் பூக்கும் பூக்களிலே
தேன் துளி போன்று அது இனிக்கட்டுமே !

அம்மா அப்பா அண்ணன் தங்கை
அனைத்து உறவும் வாழ்த்தும்போது
நண்பர்கள் கூட்டம் தேடிவந்து
நல்ல இனிப்பை வழங்கும்போது
திகட்ட திகட்ட திளைத்திருக்க
திரும்ப திரும்ப இது வேண்டும்

உள்ளமெல்லாம் வருத்தமின்றி
ஓடிவரும் எதிர்காலமெல்லாம்
அள்ள அள்ள அன்பு மிக கொண்டு
அமுதம் போன்று வாழ்வை பெற்று
உலகில் எல்லாம் உன் எழுத்தால்
உயரவேண்டும் உன் பெருமை

இந்நாளும் என் வாழ்த்துக்கள் !
எந்நாளும் என் வாழ்த்துக்கள்!



எழுதியவர் : . ' .கவி (11-Jun-11, 5:41 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 1188

மேலே