நிச்சயம் விடிந்தே தீரும் ! ! !

தமிழனே !
தியாகங்கள் புரிந்து இளைதவனே !
பிறருக்காகவே உழைத்தவனே !
போதும் !
கைகட்டி வாழ்ந்தது போதும் !
கைநீட்டி வாங்கியது போதும் !
எத்தனை நாட்கள்
அடுத்தவன் சட்டத்தில் வாழபோகிறாய் !
கட்டபடிருக்கும் உணர்வுகளை எல்லாம்
அவிழ்த்துவிட்டு எழுந்து வா !
சாட்டை எடுத்து வா !
நாட்டை திருத்த வா !
இருள் அண்டி இருப்பது
உன்னில் மட்டும் அல்ல !
இந்த மண்ணிலும் தான் !
ஒரு நாள் விடியமலா போய்விடும் !
நிச்சயம் விடியும் !
அந்த விடியல் ஏன் உன்னால்
வந்ததாக இருக்க கூடாது !
எழுந்து வா ! வாகை சூட வா ! . . .